×

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

சியோல்: ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரீஸ், இந்த வார இறுதியில் தென் கொரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது,  கொரியாக்களை பிரிக்கும் ராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்தை பார்வையிட உள்ளார். அதே நேரத்தில் கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் அமெரிக்க மற்றும் தென் கொரிய கடற்படை கப்பல்கள் கூட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் வடகொரியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கமலா ஹாரிஸ் தென்கொரியாவுக்கு வருவதற்கு முன், வடகொரியா தனது கிழக்கு கடற்பகுதியை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்தியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை புதன்கிழமை ஏவப்பட்டதாக தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் தெரிவித்து உள்ளனர். வடகொரியா இந்த வாரத்தில் ஏவப்பட்ட இரண்டாவது ஏவுகணை இதுவாகும்.

Tags : North Korea , North Korea tests missile again
× RELATED வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது:...