ஒன்றிய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக வெங்கட்ரமணி நியமனம்: தமிழகத்தை சேர்ந்தவர்

புதுடெல்லி: ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக, தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வெங்கட்ரமணி நியமிக்கப்பட்டு உள்ளார். ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக (அட்டர்னி ஜெனரல்)  கே.கே.வேணுகோபால் நீண்ட காலமாக இருந்து வருகிறார். 91 வயதான இவருக்கு கடந்தாணடு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இவருடைய இந்த பதவிக்காலம் நாளையுடன் முடிகிறது. அவருக்கு மேலும் பதவி நீட்டிப்பு வழங்க ஒன்றிய அரசு விரும்பிய போதிலும், வயது மூப்பு காரணமாக வேணுகோபால் அதை ஏற்க மறுத்து விட்டார்.

இதையடுத்து, ஒன்றிய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஙர் வெங்கட்ரமணி நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவர், கடந்த 1977ம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில்  பதிவு செய்தார். 1982ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். உச்ச நீதிமன்றத்தில் 42 ஆண்டுக்கும் மேலாக இவர் பணியாற்றி உள்ளார். அரசியல் சாசனம், சுற்றுச்சூழல் சட்டங்கள், வரி தொடர்பான வழக்கு, பழங்குடியினர் உரிமைகள் மற்றும் குழந்தைகள், பெண்கள் உரிமைகள் குறித்த  பல வழக்குகளில் ஆஜராகி உள்ளார். பல்வேறு உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசுகள், ஒன்றிய அரசின் சார்பில்  வாதாடி இருக்கிறார்.

Related Stories: