ஈரோடு கோபிச்செட்டிபாளையம் கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு திடீர் ஆய்வு

சென்னை: பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம், கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில், சாலை பாதுகாப்பு குறித்து, ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு, நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வழியில், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில், திடீர் எனச் சென்று ஆய்வு மேற்கொண்டார். வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி உடனிருந்தார். அந்த ஆய்வின்போது,

1. பணியாளர்களின் வருகை பதிவேடு

2. மறைபொருள் அறிக்கை  (Confidential Report)

3. ஒப்பந்த பதிவேடு

4. ஊதியப் பட்டில்

5. ஜி.எஸ்.டி.பதிவேடு

6. அளவுப் புத்தகங்கள் பதிவேடு (M-B00k)

7. வழக்குகள் பதிவேடு

8. தன்பதிவேடு

9. பகிர்மானப் பதிவேடு

10. பணி முடிவு அறிக்கை

11. கருவூல ஒத்திசைவு பதிவேடு

* மேலும், உங்கள் தொகுதியில் முதமைச்சர் மனுக்களின் நிலை? மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் குறித்த பதிவேடு.

* ஒப்பந்தப்புள்ளி பதிவேடு மற்றும் பணி உடன்படிக்கை பதிவேடு உட்பட அனைத்துப் பதிவேடுகளையும் ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, திரு.பிரதீப் யாதவ், இ.ஆ.ப., நெடுஞ்சாலைத்துறை அரசு முதன்மைச் செயலாளர்,  தலைமைப் பொறியாளர்கள் திரு.சந்திரசேகரன், திரு.பாலமுருகன், மற்றும் திரு.கண்ணன், கண்காணிப்பு பொறியாளர்,   திரு.ப.செல்வகுமார்  கோட்டப் பொறியாளர் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: