×

சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் நீண்ட நாட்களாக எடுக்காத வாகனங்களை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து எடுத்து செல்லலாம்: சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நீண்ட நாட்களாக மெட்ரோ பயணிகள் தங்களது வாகனங்களை எடுக்காமல் உள்ளார்கள். இதில் இருசக்கரம், மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் மெட்ரோ பயணிகள் தங்களது வாகனங்களை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து எடுத்துச் செல்லலாம் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவன கட்டுப்பாட்டில் 41 மெட்ரோ இரயில் நிலையங்கள் உள்ளது. இந்த நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று காலக்கட்டத்தில் இருந்து. தோராயமாக 120 அனைத்து வகை வாகனங்களும் எடுத்துச் செல்லாமல் அதன் உரிமையாளர்கள் பல்வேறு காரணத்தால் விட்டு சென்றுள்ளனர். அவர்களது வாகனங்களை எடுத்துச் செல்ல வாகனத்திற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அதற்கான வாகன நிறுத்த கட்டணத்தை செலுத்தி வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை எடுத்துச் செல்லலாம் என்று கூறியுள்ளனர்.

அவ்வாறு எடுத்துச் செல்லாத வாகனங்கள் அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். எனவே வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை பெற்றுச்செல்ல ஒரு வாய்ப்பை மெட்ரோ இரயில் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் தங்களது வாகனங்களை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இன்று 28.09.2022 முதல் 28.10.2022-ம் தேதிக்குள் எடுத்து செல்லலாம். இந்த வாய்ப்யை தவறவிட்டால் வாகனங்கள் அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.


Tags : Chennai Metro Railway Stations ,Chennai Metro Railway Administration , Vehicle that has not been taken for a long time, proper document, submitted and can be taken, Metro Rail Administration
× RELATED சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு...