×

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்னையில் கருமேகம் சூழ்ந்து இரவு போல காட்சி அளித்து பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம்,வடபழனி, அண்ணாநகர்,எழும்பூர், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், கோவர்த்தகிரி, பருத்திப்பட்டு, அசோக் நகர், மாம்பலம், செங்குன்றம், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்தனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காக தொண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர், அதே நேரத்தில் தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Chennai ,Tiruvallur ,Kanchipuram ,Ranipettai , Yellow alert 4 district, Chennai, Tiruvallur, Kanchipuram, Ranipettai, Meteorological Department Notification
× RELATED “சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services)...