9 ஆண்டுகளாக குடிநீர் வரி செலுத்தாத தனியார் நிறுவனத்துக்கு ‘சீல்’: குடிநீர் வாரியம் அதிரடி

சென்னை: கடந்த 9 ஆண்டுகளாக குடிநீர் வரி செலுத்தாத கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு ‘சீல்’ வைத்து சென்னை குடிநீர் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தொழிற்பேட்டையில் நியோ மெஜஸ்டிக் இன்ஜினியரிங் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் கடந்த 9 ஆண்டுகளாக குடிநீர், கழிவுநீர் வரியை செலுத்தவில்லை. இதுதொடர்பாக, சென்னை குடிநீர் வாரியம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வரியை கட்டுவதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

கடந்த 9 ஆண்டுகளாக இந்த தனியார் நிறுவனம் சென்னை குடிநீர் வாரியத்துக்கு ரூ.3,46,562 பாக்கி வைத்துள்ளது. இந்நிலையில், நேற்று குடிநீர் வாரிய வருவாய்த் துறை அதிகாரிகள், இந்த தனியார் நிறுவனத்துக்கு சீல் வைத்தனர். இதேபோன்று குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியை பாக்கி வைத்துள்ள நிறுவனங்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் வரிகளை உடனடியாக கட்டி நிர்வாக நடவடிக்கையை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரிய  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: