நடிகர் விஷால் வீட்டில் கல்வீச்சு கண்ணாடிகள் உடைப்பு

சென்னை: நடிகர் விஷால் வீடு மீது  மர்மநபர்கள் கற்களால் தாக்கியுள்ளனர். தயாரிப்பாளரும் பிரபல நடிகருமான விஷால் சென்னை அண்ணா நகர் 12வது தெருவில் தனது குடும்பத்துடன் வசிக்கிறார், இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் விஷால் வீட்டினை மர்ம நபர்கள் கற்களால் தாக்கியுள்ளனர். இதில், விஷாலின் வீட்டு கண்ணாடிகள் சேதமானது. வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா ஆய்வுசெய்த போது சிவப்பு காரில் வந்த மர்ம நபர்கள் கற்களை வீசி சேதப்படுத்தும் காட்சி பதிவாகியுள்ளது.

இதனையடுத்து நேற்று மாலை நடிகர் விஷால் சார்பில் அவரது மேலாளர் ஹரிகிருஷ்ணன், அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார்  அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் படப்பிடிப்பிற்காக நடிகர் விஷால் வெளியூர் சென்றுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடைப்பெற்றதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: