தனுஷுக்கு ஜோடியாகிறார் சித்தி இத்னானி

சென்னை: தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் சித்தி இத்னானி. கிரகணம் படத்தை இயக்கியவர் இளன். இவர் அடுத்ததாக ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடித்த பியார் பிரேமா காதல் படத்தை இயக்கினார். இதையடுத்து தனுஷிடம் கதை சொல்லி அவர் ஓகே வாங்கியிருந்தார். இப்போது நானே வருவேன் படம் ரிலீசாக உள்ளது. வாத்தி படத்தையும் தனுஷ் முடிக்கும் தருவாயில் இருக்கிறார்.

இதனால் இளனின் படத்தில் நடிக்க அவர் கால்ஷீட் கொடுத்துவிட்டார். இளன் இயக்க உள்ள இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடிக்கிறார். இவர் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர். காதல், ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தின் கதை உருவாகியுள்ளது. நவம்பரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

Related Stories: