திருப்பதியில் காஜல் சாமி தரிசனம்

திருப்பதி: திருப்பதி கோயிலில் நடிகை காஜல் அகர்வால் சாமி தரிசனம் செய்தார். இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று வருகிறது. இதில் காஜல் அகர்வாலும் கமல்ஹாசனும் பங்கேற்று நடித்து வருகிறார்கள். இந்நிலையில் திருப்பதியில் உள்ள கோயிலுக்கு செல்ல காஜல் திட்டமிட்டார். இதையடுத்து மும்பையில் இருந்த தனது கணவர் கவுதம் கிட்ச்லுவை திருப்பதிக்கு அழைத்துக்கொண்டார்.

படப்பிடிப்புக்கு இடையே கிடைத்த ஒருநாள் விடுமுறையில் அவர் திருப்பதி கோயிலுக்கு கணவருடன் சென்று வந்தார். ‘இந்தியன் 2 படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக திருப்பதியில் நடைபெற்று வருகிறது. இடையில் கிடைத்த பிரேக்கில் திருப்பதி கோயிலுக்கு செல்ல விரும்பி இங்கு வந்தேன். மீண்டும் இந்தியன் 2 ஷூட்டிங்கில் நாளை முதல் பங்கேற்க உள்ளேன்’ என்றார் காஜல் அகர்வால்.

Related Stories: