×

விண்கலத்தை மோத செய்து விண்கல் சுற்றுப் பாதையை மாற்றி அமெரிக்கா சாதனை: பூமி மீது மோத வந்தால் இனி கவலையில்லை

வாஷிங்டன்: பூமியின் மீது மோதக் கூடிய விண்கற்களின் மீது விண்கலத்தை மோதி, அவற்றின் பாதையை மாற்றுவதற்கான முதல் கட்ட சோதனையை நாசா வெற்றிகரமாக செய்துள்ளது.
விண்வெளியில் ஏராளமான பிரமாண்ட விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவை பூமியின் மீது மோதி பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய அபாயங்கள் அதிகமாக உள்ளன. சமீபத்தில் கூட, சில பிரமாண்ட விண்கற்கள் பூமிக்கு நெருக்கமாக வந்து சென்றன. இந்நிலையில், பூமியை நோக்கி மோதக் கூடிய வகையில் வரும்  விண்கற்களின் மீது விண்கலத்தை அதிக வேகத்தில் மோதச் செய்து, அவற்றின் பாதையை மாற்றுவதற்கான சோதனையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா ஈடுபட்டுள்ளது. இதற்காக, ‘இரட்டை விண்கல் திசை திருப்பும் சோதனை’ (டார்ட்) என்ற பெயரிலான  விண்கலத்தை, 9 மாதங்களுக்கு முன் அது ஏவியது.

இது, விண்வெளியில் 70 லட்சம் மைல்களுக்கு  சுற்றிக் கொண்டிருக்கும் 760 மீட்டர் சுற்றளவு கொண்ட ‘டிடிமோஸ்’ என்ற  பிரமாண்ட விண்கல்லை நோக்கி சென்றது. இந்த விண்கல்லின் சுற்று வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் மார்போஸ் என்ற சிறிய கோளை, இது முதலில் குறிவைத்தது. 22 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து, இதன் மீது டார்ட் விண்கலம் மோதியது. இதனால், இந்த விண்கல் டிடிமோஸ் விண்கல்லின் சுற்றுப் பாதையில் இருந்து விலகி,  புதிய சுற்றுப்பாதைக்கு  சென்றது. இதன் மூலம், விண்கற்களின் பாதையை மாற்றும் நாசாவின் முதல் கட்ட சோதனை வெற்றி அடைந்துள்ளது.


Tags : America ,Earth , Crashing the spaceship and changing the trajectory of the spaceship America feat: No more worries if it crashes into the earth
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!