×

வியட்நாமை தாக்கும் ‘நோரு’ புயல் 8 லட்சம் பேர் வெளியேற்றம்

ஹனோய்: வியட்நாமை இன்று அதிகாலை ‘நோரு’ என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனை முன்னிட்டு கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உட்பட 8 லட்சம் பேர் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். இவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், நோரு புயல் கரையை கடக்கும் வரை ரயில் சேவைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே செல்வதை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. புயல் காரணமாக 180 கிமீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Tags : Vietnam , Cyclone 'Noru' hits Vietnam, 8 lakh people evacuated
× RELATED வியட்நாம் நாட்டில் நிதி மோசடி...