ராகுல் நடை பயணத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

திருவனந்தபுரம்: ராகுல் காந்தியின் நடை பயணத்திற்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடை பயணம், தற்போது கேரளாவில் நடக்கிறது. நாளை (29ம் தேதி) வரை கேரளாவில் அவர் நடைபயணம் செய்கிறார். இந்நிலையில், கொச்சியை சேர்ந்த வழக்கறிஞரான விஜயன், ராகுல் நடை பயணத்தால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரினார். இதற்கு கேரள அரசும் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ‘நடைபயணம் அமைதியாக நடக்கிறது,’ என கூறப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், மனுதாரர் தன்னுடைய புகாரை நிரூபிப்பதற்கு தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related Stories: