மோடியின் ஆட்சியில் தீவிரவாதத்துக்கு பதிலடி ஒன்றிய அமைச்சர் பேட்டி

சென்னை: மோடி ஆட்சியில் தீவிரவாதத்துக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினிகுமார் செளபே கூறியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், நுகர்வோர் விவகாரங்களுக்கான துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே நேற்று அளித்த பேட்டி: பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும். பயங்கரவாத அமைப்பினரின் சமீபத்திய பெட்ரோல் குண்டு தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. பிஎப்ஐ போன்ற அமைப்பு வேரூன்ற ஒரு சில அரசியல் கட்சிகள் அவர்களை திருப்திப்படுத்தும் கொள்கை காரணமாகும். அவர்களின் கனவுகள் ஒருபோதும் நிறைவேறாது, தகர்த்தெறியப்படும். பிரதம மோடியின் ஆட்சி உள்ளது.

தீவிரவாதத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. பாஜவினர், ஆர்எஸ்எஸ்காரர்கள் மீதான தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது. பாஜ தொண்டர்கள் யாருக்கும் அச்சப்பட வேண்டாம். நாங்கள் சமாதான புறாக்களை பறக்க விடுவதில்லை, சிறுத்தைகளை விடுகிறோம். மக்களின் உரிமைகளுக்காக வீதியில் இறங்கி போராடுவோம். தமிழக மக்கள் அமைதியை விரும்புபவர்கள். தமிழகத்தில் இருந்து இந்தியா ஜோடோ யாத்திரையை காங்கிரஸ் தொடங்கியது. காங்கிரஸ் கட்சி தற்போது உடைந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பாஜவினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது. பாஜ ஜனநாயக வழிகளில் மக்களின் குரலை உயர்த்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: