காவல்துறையை மிரட்டும் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி

கோவை: கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டி: கோவையில் பாஜ நடத்திய ஆர்ப்பாட்டம் மூலம் கோவை அமைதியாக இருப்பதை ஆர்எஸ்எஸ், பாஜ விரும்பவில்லை என தெரிகிறது. கோவை கூட்டத்தில் பேசிய பேச்சுக்காக பாஜ தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும். மாநில முதல்வரை மிரட்டும் விதமாக அண்ணாமலை பேசுகின்றார். தமிழக காவல் துறையை மிரட்டுகிறார். அரசியல் கட்சி தலைவர் என்ற அடிப்படை நாகரிகம் இல்லாத வகையில் பேசுகிறார். இத்தகைய பேச்சை அனுமதிக்கக்கூடாது. தமிழக அரசு இது போல பேசுபவர்களை நடமாட அனுமதிக்கக்கூடாது. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு நீதிமன்றம் எப்படி அனுமதி அளித்தது என தெரியவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து அந்த அமைப்பினர் ஏற்கனவே நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலங்களை பார்க்க வேண்டும். காந்தி ஜெயந்தியன்று ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு என்ன வேலை?  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: