மதவெறியர்களை தூண்டிவிட்டு என்னை கொல்ல சதி: நவாஸ் மகள் மீது இம்ரான் குற்றச்சாட்டு

லாகூர்: மதவெறியர்களை தூண்டிவிட்டு என்னை கொல்ல சதித் திட்டம் நடப்பதாகவும், நவாஸ் மகள் இதனை செய்வதாக இம்ரான் கான் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் அவரது அமைச்சரவை  அதிகாரிகளுக்கு இடையேயான நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆடியோ பேச்சு லீக்  ஆனதால், பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரஹீம்  யார்கானில் நடந்த பேரணியில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பேசுகையில்,  ‘அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இடையிலான பேச்சு தொடர்பான ஆடியோ  வெளியானதையடுத்து, பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் மகளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) மூத்த தலைவருமான மரியம் நவாஸ், என்னைக் கொல்ல சதி செய்தார். மத வெறியர்களை தூண்டிவிட்டு வகுப்புவாதம் மற்றும் மத வெறுப்பு பிரசாரம் மூலம் கொல்ல விரும்புகிறார். இதனால் என் உயிருக்கு மதவெறியர்களால் ஆபத்து உள்ளது. ஆனால் நான் மரணத்திற்கு பயப்படவில்லை. எனது மரணம் இறைவனால் தீர்மானிக்கப்படுகிறது; வேறு யாராலும் தீர்மானிக்கப்படுவது இல்லை’ என்று கூறினார்.

Related Stories: