×

தொன்மையான 108 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க வல்லுநர் குழு ஒப்புதல்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், தொன்மையான 108 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 41 வது வல்லுநர் குழு கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கச்சேரிமேடு, அருள்மிகு சக்திவிநாயகர் திருக்கோயில்,  

பு.புளியம்பட்டி, அருள்மிகு இராமலிங்க சௌடேஸ்வரியம்மன் திருக்கோயில், நாமக்கல் மாவட்டம்,  திருச்செங்கோடு, அருள்மிகு அழகுராய பெருமாள் திருக்கோயில், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம், அருள்மிகு தாண்டவேஸ்வரர் திருக்கோயில், அயக்கமங்கலம், அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், கழுமங்கலம், அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருவையாறு, அருள்மிகு காசி மகரிஷி திருக்கோயில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, அருள்மிகு லெட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில், வானூர், அருள்மிகு திருமுகிலீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், அருள்மிகு திரிகாலஞானேஸ்வரர் திருக்கோயில், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம்,

அருள்மிகு சொக்கப்பனை விநாயகர் திருக்கோயில் உட்பட 108 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருக்கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும். இக்கூட்டத்தில் திருப்பணி இணை ஆணையர் திரு.பொ.ஜெயராமன், ஆகம வல்லுநர் குழு உறுப்பினர்கள் திரு.கோவிந்தராஜ பட்டர், திரு.கே.சந்திரசேகரபட்டர், திரு. ஆனந்த சயன பட்டாச்சாரியார், தலைமை பொறியாளர் (ஓய்வு) முதுநிலை ஆலோசகர் திரு.கே.முத்துசாமி, ஸ்தபதி திரு.கே.தட்சிணாமூர்த்தி, தொல்லியல் துறை வல்லுநர்கள் முனைவர் கே.மூர்த்தீஸ்வரி, திருமதி சீ.வசந்தி, திரு.இராமமூர்த்தி, தொல்லியல் துறை  வடிவமைப்பாளர்  முனைவர்  டி.சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : 108 Tirukoils , Thonmai, 108 Thirukoil, Tirupani, Expert Committee, Approval
× RELATED தொன்மையான 108 திருக்கோயில்களில்...