கிருஷ்ணா கால்வாயில் கன்டெய்னர் லாரி விழுந்தது: ஊத்துக்கோட்டை அருகே பரபரப்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் ஏற்றிவந்த கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது. சென்னை துறைமுகத்தில் இருந்து கம்ப்யூட்டர் உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு கர்நாடகா மாநிலத்துக்கு கன்டெய்னர் லாரி சென்றது. திருவாரூரை சேர்ந்த கார்த்திக் (23) என்பவர் ஓட்டிச்சென்றார். ஊத்துக்கோட்டை அருகே அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாய் பகுதியில் எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிட லாரியை திருப்பியபோது அது கட்டுப்பாட்டை இழந்து ஓடி, கிருஷ்ணா கால்வாயில் கவிழ்ந்தது.

கால்வாயில் குறைந்தளவே தண்ணீர் செல்வதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதன்காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஊத்துக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். இதுபற்றி கன்டெய்னர் லாரி உரிமையாளர் கொடுத்துள்ள புகாரின்படி, போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: