தஞ்சையில் 3 காவல் ஆய்வாளர்களுக்கு தலா ஒரு லட்சம் அபராதம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

தஞ்சை: தஞ்சை பந்தநல்லூர் கோயில் திருட்டு வழக்கில் புகாரளித்தவரை அலைக்கழித்த காவல் ஆய்வாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் விதித்துள்ளது. புகார்தாரர் வெங்கட்ராமனுக்கு ரூ.3 லட்சத்தை இழப்பீடாக வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு அளித்துள்ளது. அலைக்கழித்த 3 அதிகாரிகளிடமிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வசூலிக்க உத்தரவு அளிக்கப்பட்டது

Related Stories: