நான்காம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவி தமிழக முதல்வர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை ஓவியமாக வரைந்து அசத்துகிறார்

பந்தலூர் : பந்தலூர் அருகே பிதர்காடு பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவி தலைவர்களின் படங்களை ஓவியமாக  வரைந்து அசத்தி வருகிறார்.

பந்தலூர் அருகே பிதர்காடு பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயின்று வரும் நான்காம் வகுப்பு படித்து வரும் சனாபாத்திமா(9) செவித்திறன் குறைபாடு உள்ளவர். இவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழக முதல்வர் மு.கஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் படங்களை வரைந்து அசத்தி வருகிறார். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் ரீத்தா மற்ற  ஆசிரியர்களின் படங்களையும் வரைந்துள்ளார்.

இந்த மாணவியின் திறமையை பார்த்து பல்வேறு தரபினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி முத்துரதி என்பவரும் பள்ளி ஆசிரியர்களின் படங்களை வரைந்து அசத்தி வருகிறார். பேச்சு போட்டியில்  ஆங்கிலத்தில் பேசி சபரீஸ் என்ற மாணவரும் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். இப்படி தனி திறமைகள் கொண்ட மாணவர்கள் பள்ளியில் பயின்று வருவதாக தலைமை  ஆசிரியர் ரீத்தா தெரிவித்தார்.

முதலமைச்சரின் படத்தை ஓவியமாக வரைந்து அசத்தி வரும் சனாபாத்திமாவை பாராட்டி நெலாக்கோட்டை ஊராட்சியின் முன்னாள் கவுன்சிலரும் பந்தலூர் மேற்கு ஒன்றிய திமுக  துணை செயலாளருமான ஞானசேகர் மாணவிக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினார்.

Related Stories: