தர்மபுரி கலெக்டர் ஆபிசில் மூதாட்டி உள்பட 2 பெண்கள் தர்ணா

தர்மபுரி : தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி உள்பட 2 பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.தர்மபுரி மாவட்டம், சின்னமாட்லாம்பட்டியை சேர்ந்தவர் சாந்தி (55). அவரது தாய் துளசி (75) ஆகியோர் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். அப்போது பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கலெக்டர் சாந்தியிடம் மனு அளிக்க செய்தனர்.

இதையடுத்து சாந்தி கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் பல வருடங்களாக சின்னமாட்லாம்பட்டி ஏரி புறம்போக்கில் ஓட்டுவீட்டில் வசித்து வருகிறோம். கடந்த 2013ம் ஆண்டு, எங்களுக்கு அரசு இலவச பட்டா அதே பகுதியில் வழங்கியது. மேலும், கடந்த 4 வருடத்திற்கு முன்பு எங்களது இடத்தை அதிகாரிகள் அளந்து காண்பித்தனர். இந்நிலையில், நாங்கள் அந்த இடத்தில் நாங்கள் வீடு கட்ட முயன்ற போது அதே பகுதியில் வசிக்கும் சிலர், நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தில் வீடு கட்டுவதை தடை செய்கின்றனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது இடத்தில் வீடு கட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: