அதிமுக-வின் அமைப்பு செயலாளராக பண்ருட்டி ராமசந்திரன் நியமனம்: ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், அதிமுகவின் அமைப்பு செயலாளராக பண்ருட்டி ராமசந்திரனை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதிமுகவில் ஒற்றைத்தலைமை சர்ச்சை வெடித்ததற்கு பின்பாக, பொதுக்குழு, நீதிமன்றம் வழக்கு என தொடர்ந்து சர்ச்சை நீடித்த வண்ணம் இருந்து வந்தது. இதனைத்தொடர்ந்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் அறிவிக்கப்பட்டாலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர். மேலும், மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமசந்திரன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், அது பெரும் சர்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், கழகப் பொருளாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் முக்கிய அறிவிப்பு - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு. பண்ருட்டி ச. இராமச்சந்திரன், B.E., (Hons) அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அதிமுகவினர் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன் என்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: