சென்னை ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடத்தில் கிரேன் கவிழ்ந்து விபத்து: அரசு பேருந்து ஓட்டுனர்கள் 2 பேர் உள்பட 3 பேர் படுகாயம்

சென்னை: சென்னை ராமபுரத்தில் கிரேன் கவிழ்ந்து பிரம்மாண்ட இரும்பு கம்பிகள் சாலையில் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தின் மீது விழுந்ததில் 7 பேர் படுகாயமடைந்தனர். சென்னை ராமபுரத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதற்க்கு பிரமாண்ட தூண்கள் அமைப்பதற்காக கண்டேன் லாரியில் கம்பிகள் கொண்டுவரப்பட்டன. சுமார் 30 அடி நீளத்திற்கு கட்டப்பட்டிருந்த கம்பிகள் கட்டுமான தளத்தில் இருந்த கிரேன் மூலம் தூக்கப்பட்டபோது கம்பிகளுடன் சேர்ந்து கிரேனும் கவிழ்ந்தது. குன்றத்தூரில் இருந்து ஆலந்தூர் பணிமனை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மீது இரும்பு கம்பிகள் விழுந்ததால் பேருந்தின் ஒரு பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

பணிமனை நோக்கி சென்ற பேருந்து என்பதால் போக்குவரத்து கழக ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் அய்யாதுரை, பூபாலன் மற்றும் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ரஞ்சித் குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் மூவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: