லண்டனில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்

லண்டன்: ஈரானில் ஹிஜாப் அணிவதை கண்காணிக்க, போலீஸ் தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போலீசாரால் கைது செய்யப்பட்ட மாஷா அமினி என்ற இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் போராட்டம் நடந்து வருகிறது.

இதே போல், லண்டனில் ஈரான் தூதரகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றனர். அருகில் உள்ள இங்கிலாந்து இஸ்லாமிய மையத்தையும் தாக்க முயன்றனர். போலீசார் மீது பாட்டில்களை வீசினர். இதை அடுத்து போலீசார் 12 பேரை கைது செய்தனர். இந்த மோதலில் 5 போலீசாரும் காயமடைந்தனர்.

Related Stories: