×

அமைச்சர் எ.வ.வேலுவுடன் கொரியாவின் சிவில் இன்ஜினியரிங் ஆலோசனை குழுவினர் சந்திப்பு

சென்னை: கொரிய நாட்டின் முன்னணி சிவில் இன்ஜினியரிங் ஆலோசனை குழுவினர் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். கொரிய நாட்டின் முன்னணி சிவில் இன்ஜினியரிங் ஆலோசனை கழக குழுவினரின் ஜயாங் இம் தலைமையில், நேற்று சென்னை தலைமை செயலகத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து “பொறியியல் சேவைகளை நவீன தொழில்நுட்பத்துடன் விரைவாக செயல்படுத்துவது’’தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

தற்போது, கொரியாவில் நடைமுறையில் உள்ள பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன்கூடிய, விரைவாகவும், எளிதாகவும் செயல்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள், இதுவரை பல்வேறு நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாகவும், தமிழ்நாட்டில் தொடங்கவிருக்கும் பல்வேறு சிவில் இன்ஜினியரிங் திட்டங்கள் குறித்தும்  விரிவாக விவாதிக்கப்பட்டது. விவாதத்தின்போது, ஜயாங் இம், கொரிய இன்ஜினியரிங் ஆலோசனை கழகம், ஜயாங் ஜியோங் சிணிளி, சங்மோ ஜெனரல் கன்ஸ்ட்ரக்ஷன், கொரியா, ஜங் சூ சாங் சிணிளி, டேடோ என்டெக், கொரியா, முகமது சஹீத், அபுதாபி, முகமது ரஃபி, அபுதாபி, ராஜ்குமார், சென்னை, இந்தியா, மராட்டி ரவி, ஹைதராபாத், இந்தியா, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் பிரதீப் யாதவ், பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Korea Civil Engineering ,Advisory ,Committee ,Minister ,AV Velu , Korea Civil Engineering Advisory Committee meeting with Minister AV Velu
× RELATED பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்