குலாம் நபி அறிவிப்பு புதிய கட்சி பெயர் ‘ஜனநாயக ஆசாத்’

ஜம்மு: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், ‘ஜனநாய ஆசாத்’ என்ற பெயரில் புதிய கட்சியை நேற்று தொடங்கினார். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர்,  திடீரென ஆகஸ்ட் 26ம் தேதி கட்சியில் இருந்து விலகினார். அவருக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் உள்பட 20க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார்கள். இந்நிலையில் குலாம் நபி ஆசாத் நேற்று தனது புதிய கட்சியை தொடங்கினார். ‘ஜனநாயக ஆசாத் கட்சி’ என்று தனது கட்சிக்கு அவர் பெயர் வைத்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குலாம் நபி ஆசாத், ‘‘எனது கட்சியின் பெயர், ஜனநாயகம், பேச்சு மற்றும் சிந்தனை சுதந்திரத்தை குறிக்கின்றது. மகாத்மா காந்தியின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டது எங்களது கட்சியின் கொள்கை. இது வேறு எந்த கட்சிக்கும் போட்டி கிடையாது. ஜம்முவில் அமைதி மற்றும் இயல்பு நிலையை வலுப்படுத்துவதில் எனது கட்சி கவனம் செலுத்தும்’’ என்றார்.

Related Stories: