×

பாரூர் ஏரியில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியில் கட்லா, ரோகு, சப்பாரை, விரால், போன்ற மீன் வகைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியின் அருகே கீழ்குப்பத்தில் இருந்து எலியானூர் செல்லும் சாலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தென்னதோப்புகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஏரியில் உள்ள மீன்கள் செத்து கரையோரம் ஒதுங்கி அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். துர்நாற்றம் காரணமாக அவ்வழியாக செல்வோர் மூக்கை பிடித்து செல்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு செத்து கரை ஒதுங்கிய மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Parur Lake , Dead fish washed ashore in Parur Lake
× RELATED முதல் போக பாசனத்திற்கு கிருஷ்ணகிரி...