இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி.20: 3 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி

கராச்சி: பாகிஸ்தான்-இங்கிலாந்து இடையே 7 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் 4வது போட்டி கராச்சியில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ரிஸ்வான் 88 (67), பாபர் அசாம் 36 (28) ரன் எடுத்தனர். இங்கிலாந்து பவுலிங்கில் டாப்லே 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 167 ரன் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில், டுக்கெட் 33, பூருக் 34, கேப்டன் மொயின் அலி 29 டேவ்சன் 34 (17) ரன்களில் ஆட்டமிழந்தனர்.  3 விக்கெட் கைவசம் இருந்த நிலையில் கடைசி 2 ஓவரில் 9 ரன் தேவைப்பட்டது. 19வது ஓவரில் ஹரிஸ் ரவூப் 5 ரன் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். கடைசி ஓவரில் 4 ரன் தேவைப்பட 2வது பந்தில், டாப்லே ரன்அவுட் ஆனார். 19.2 ஓவரில் இங்கிலாந்து 163 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 3 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி

பெற்றது. அந்த அணியின் ஹரிஸ் ரவூப், முகமது நவாஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஹரிஸ் ரவூப் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் 2-2 என சமனில் உள்ள நிலையில் 5வது போட்டி, லாகூரில் 28ம்தேதி நடக்கிறது.

Related Stories: