விசிக சார்பில் திருமாவளவன் மணிவிழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள்: குமிழி சரவணன் ஏற்பாடு

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் மணிவிழாவை முன்னிட்டு, குமிழி ஊராட்சியில் விசிக சார்பில் பொதுக்கூட்டம், ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை குமிழி சரவணன் சிறப்பாக செய்திருந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் 60வது ஆண்டு மணி விழாவை, தமிழகம் முழுவதிலும் விசிக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், குமிழி ஊராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் மணிவிழாவை முன்னிட்டு, குமிழி சரவணன் ஏற்பாட்டில், தென்னவன் ஒருங்கிணைப்பில், குமிழி பேருந்து நிலையம் அருகே விசிக சார்பில் பொதுக்கூட்டம், ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருப்போரூர் விசிக எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி பங்கேற்று, 7 இடங்களில் கட்சிக்கொடி ஏற்றி, 500க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு வேட்டி, சேலை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. திருமாவளவனின் மணி விழாவை முன்னிட்டு குமிழி ஊராட்சியின் பல்வேறு இடங்களில் பசுமை மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் காஞ்சிபுரம்- விழுப்புரம் மண்டல செயலாளர் சூ.க.விடுதலை செழியன், கராத்தே பாண்டியன், மாஸ்டர் ஆனந்தன், கோ.மு.மணிமாறன், வண்டலூர் சு.செல்வம், சு.ஸ்ரீனிவாசன், திராவிட முரளி உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: