பாலக்காட்டில் பெட்ரோல், காஸ் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டி பேரணி

பாலக்காடு :  பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து சித்தூர் தாலுகா இளைஞர் காங்கிரசார், விவசாயிகள் மாட்டு வண்டி பேரணி சென்றனர்.பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறையில் பெட்ரோல், டீசல், காஸ் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து சித்தூர் தாலுகா இளைஞர் காங்கிரசார் மற்றும் விவசாயிகள் மாட்டு வண்டி பேரணி நேற்று நடத்தினர்.

இப்பேரணியை கொழிஞ்சாம்பாறையில் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் தணிகாசலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சித்தூர் தொகுதி காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ஷபீக் தலைமை தாங்கினார். பெட்ரோல், டீசல், காஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இவற்றை மத்திய, மாநில அரசு கட்டுப்படுத்த வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாட்டு வண்டி பேரணி நடத்தினர். பேரணி கொழிஞ்சாம்பாறை முதல் கம்பிளச்சுங்கம் வரை நேற்று நடைபெற்றது. மேலும், ராகுல்காந்தியின் தேசிய ஒற்றுமை நடைப்பயணத்திற்கு ஆதரவு தெரிவித்தும் பிரசாரம் செய்தனர்.

இதில், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலர்கள் சாஜன், பிரியங்கா, தொகுதி துணை தலைவர்கள் சுரேஷ், சனாதன், முருகேஷ், ஸ்ரீனிவாஸ், ஷாகுல் ஹமீது ஆகியோர் கலந்துகொண்டனர்..வட்டாரப் பொறுப்பாளர்கள் ஜித்தின், மனு,  வருண், சம்சாத் பானு, வட்டாரத் தலைவர் ராஜுநாத், சதானந்தன் இளைஞர் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் அனிஷ், தாமஸ் லெனோ, கிருதில், சுனில்குமார், வத்சன், பெரோஸ்கான் ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: