சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் தேசிய நெடுஞ்சாலைத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையிலிருந்து விக்கிரவாண்டி, நெய்வேலி வழியாக கும்பகோணம் செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளது. 4 வழிச்சாலையாக மாற்றுவதற்கு கடந்த 2017ல் தொடங்கிய பணிகள் இன்னும் முடிவடையவில்லை. 160 கி.மீ. தூரம் சாலைகள் மோசமாக உள்ளதால் விழுப்புரம் ஆண்டிமடம் வழியாக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்கின்றன. 4 வழிச்சாலை பணிகள் முடியும் வரை டோல்களில் சுங்கக்கட்டணம் வசூலுக்கு தடை விதித்து உத்தரவிட கோரி வழக்கறிஞர் கே.பாலு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

Related Stories: