வறுமையை ஒழித்து, தன்னடக்கத்தின் அடையாளமாக விளங்குபவர் மன்மோகன் சிங்: ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து..!!

டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல் நலத்துடனும் மன்மோகன் சிங் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டுவதாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் தன்னடக்கம், அர்ப்பணிப்பு, இந்தியாவின் வளர்ச்சிக்கு அவருடைய பங்களிப்பு எவருடனும் ஒப்பிட முடியாது என்றும் என்னை போன்ற பல இந்தியர்களுக்கு மன்மோகன்சிங் ஒரு எடுத்துக்காட்டு என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். மன்மோகன் சிங் அவர்கள் நல்ல உடல்நலத்துடன் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் என ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார்.  

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பொது வாழ்க்கையில் கண்ணியத்தை கடைபிடித்து நிலையான ஆட்சியை வழங்கியவர் மன்மோகன் சிங். வறுமையை ஒழித்து, தன்னடக்கத்தின் அடையாளமாக விளங்குபவர் மன்மோகன் சிங் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழ்ந்துள்ளார். மன்மோகன் சிங் நல்ல உடல் நலத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.

Related Stories: