திருப்பதியில் நாளை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடக்கம்: வண்ண மின்விளக்குகளால் ஜொலிக்கிறது திருப்பதி திருமலை..!!

ஆந்திரா: 2 ஆண்டுகளுக்கு பின்பு பக்தர்கள் பங்களிப்புடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவுபெறும் விதமாக திருப்பதியில் ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் நாளை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நடைபெறவுள்ள அந்தரார் வனத்தில் ஸ்ரீனிவாசப்பெருமானின் சர்வ சேனாதிபதியான விஷ்வ சேனாதிபதியை நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுசெல்லவுள்ளனர்.

அதனை தொடர்ந்து வசந்த மண்டலம் அருகே அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் 9 பானைகள் வைத்து அதில் நவதானியங்கள் செலுத்தி பூஜைகள் நடத்தப்படவுள்ளது. பிரம்மோற்சவத்திற்காக திருப்பதி மற்றும் திருமலை வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. மகா விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை விளக்கும் விதமாக தத்ரூப காட்சிகளும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் திருமலை கலியுக வைகுண்டமாக காட்சியளிக்கிறது.

Related Stories: