புழுதிவாக்கத்தில் யுனானி, சித்த மருத்துவ முகாம்

ஆலந்தூர்: புழுதிவாக்கத்தில் சமூக சேவை அறக்கட்டளை, லயன்ஸ் கிளப் மற்றும் இம்காப்ஸ் நிறுவனம் இணைந்து சித்த மருத்துவம் மற்றும் யுனானி மருத்துவ முகாமை நடத்தின. முகாமிற்கு அறக்கட்டளை தலைவர் ரெங்கசாமி தலைமை வகித்தார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக மூத்த துணை இயக்குனர் மாணிக்கம், இம்காப்ஸ் நிறுவன தலைவர் கண்ணன், செயலாளர் காதர்மொய்தீன் முன்னிலை வகித்தனர். முகாமில், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் கலந்துகொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

இதில், பெரு ங்குடி மண்டல குழு தலைவர் ரவிச்சந்திரன், 186வது வார்டு கவுன்சிலர் ஜெ.கே.மணிகண்டன், சமீனா செல்வம், வட்ட  செயலாளர் குமாரசாமி, வழக்கறிஞர் அமலநாதன, குபேரா யோகராஜன் ஆகியோர் கலந்து  கொண்டனர். முகாமில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு யுனானி மற்றும்  சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டன.

Related Stories: