கொரியா ஓபன் டென்னிஸ் அலெக்சாண்ட்ரோவா அசத்தல்

சியோல்: கொரியா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ரஷ்யாவின் எகடரினா அலெக்சாண்ட்ரோவா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் யெலனா ஆஸ்டபென்கோவுடன் (லாத்வியா) மோதிய அலெக்சாண்ட்ரோவா, டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டை 7-6 (7-4) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார். அதே வேகத்துடன் 2வது செட்டில் ஆதிக்கம் செலுத்திய அவர், ஆஸ்டபென்கோ சர்வீஸ் ஆட்டங்களை எளிதாக முறியடித்து 7-6 (7-4), 6-0 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இப்போட்டி 1 மணி, 25 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

Related Stories: