பஞ்சாப் மாநில வங்கி கொள்ளை கதையில் அஜித்

சென்னை: வரும் 2023 பொங்கல் பண்டிகைக்கு அஜித் குமாரின் ‘துணிவு’ படம் திரைக்கு வரும் என்று தெரிகிறது. போனி கபூர், இயக்குனர் ஹெச்.வினோத், அஜித் குமார் கூட்டணி, திரைக்கு வந்த ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ ஆகிய படங்களுக்குப் பிறகு ‘துணிவு’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. தற்போது பாங்காக்கில் படப்பிடிப்பு நடக்கிறது. இதில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்தப் படம் ‘மணி ஹெய்ஸ்ட்’ போன்ற திரில்லர் படம் என்று ஏற்கனவே ஹெச்.வினோத் அறிவித்துள்ளதால், வங்கி கொள்ளையை மையப்படுத்தி ‘துணிவு’ படம் உருவாகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போன்றவற்றில், ரூபாய் நோட்டு பாணியில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதை வைத்து இப்படம் வங்கி கொள்ளை சம்பந்தமானது என்று ரசிகர்கள் தீர்மானித்துள்ளனர்.

`சதுரங்க வேட்டை’, `தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ ஆகிய படங்கள்மூலம் ரசிகர்களிடம் பிரபலமான ஹெச்.வினோத், `துணிவு’ படத்தின் கதையைப் பற்றி இதுவரையில் பேசவில்லை. கடந்த 1987ல் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், போலீஸ் அதிகாரிகளைப் போல் உடையணிந்து வந்த சிலர், ஒரு வங்கியில் புகுந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடித்தனர். பிறகு அவர்கள் 4.5 மில்லியன் டாலர்களுடன் தப்பித்துச் சென்றனர். இச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து `துணிவு’ படம் உருவாக்கப்படுவதாக கூறப் படுகிறது. கொள்ளையடித்தவர்கள் பாங்காக்கிற்கு தப்பித்து செல்வதாகவும், அஜித் குமார் அவர்களை விரட்டிச் சென்று கைது செய்வதாகவும்  கதை அமைக்கப்பட்டுள்ளதாம். இதில் வில்லன், ஹீரோவாக இரட்டை வேடங்களில் அஜித் குமார் நடிப்பதாக வும், ஹீரோ அஜித் குமார் போலீஸ் அதிகாரி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: