×

பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் ஜேசுராஜ் மற்றும் இலியாஸ் ஆகியோர் கைது; கைது செய்யப்பட்டவர்கள் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகளாக இருக்கின்றனர்: காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேட்டி

கோவை: பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் ஜேசுராஜ் மற்றும் இலியாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி மற்றும் நுண்ணறிவு பிரிவு விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகளாக இருக்கின்றனர் என கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

கோவையில் கடந்த இரு தினங்களாக அடுத்தடுத்து பாஜக நிர்வாகி, ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்வத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  

இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்;  சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு ஜேசுராஜ், இலியாஸ் ஆகியோரை கைது செய்துள்ளோம். கைது செய்யப்பட்ட இருவரும் எஸ்.டி.பி.ஐ கட்சியில் பொறுப்பில் உள்ளனர்.

பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம். பல்வேறு மத அமைப்பினரும் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.சிசிடிவி மற்றும் நுண்ணறிவு பிரிவு விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீடு அல்லாத பொருட்கள் மீது தீவைத்து தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இன்னும் இரண்டு வழக்குகளில் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் என தெரிவித்துள்ளார்.

Tags : Jesuraj ,Ilyas ,STBI Party ,Governor Balakrishnan , Jesuraj and Ilyas arrested in petrol bomb blast case; Arrested are STBI party functionaries: Police Commissioner Balakrishnan interview
× RELATED முஸ்லிம்கள் குறித்து அவதூறாக பேசிய...