அரண்வாயல் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம், அரண்வாயல் ஊராட்சியில் நேற்று கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ், நேற்று மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமுக்கு ஒன்றியகுழு தலைவர் ஜெ.ஜெயசீலி ஜெயபாலன் தலைமை தாங்கினார்.

    

ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன், ஒன்றியகுழு துணை தலைவர் மு.பர்கத்துல்லாகான், வட்டார வளர்ச்சி அலுவலர் இரா.வெங்கடேசன், மாவட்ட கவுன்சிலர் இந்திரா குணசேகர், ஒன்றிய கவுன்சிலர் நவமணி அன்பழகன், ஊராட்சி தலைவர் அ.காவேரி அன்பழகன், துணை தலைவர் ரா.சுந்தரி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ம.சரவணகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எம்.அந்தோணி ஆகியோர் வரவேற்றனர்.

   

இந்த மருத்துவ முகாமை பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி பங்கேற்று துவக்கி வைத்தார். இதில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மிக்க சிறப்பு தொகுப்பை வழங்கி வாழ்த்தி பேசினார். மேலும் பொது மருத்துவம், கர்ப்பிணிகள் மற்றும் மகளிர் நலம், கண் மருத்துவம், குழந்தைகள் சிகிச்சை மற்றும் ஆலோசனை, ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் சிகிச்சை, இசிஜி மற்றும் ஸ்கேன் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, பல் மருத்துவம், சித்த மருத்துவம், இயன்முறை மருத்துவம், கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் ஆலோசனை, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்ட ஆலோசனைகளை மருத்துவ குழுவினர் வழங்கினர்.

இதில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், குழந்தைகள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். இதில் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் கே.ஆர்.ஜவஹர்லால், காசநோய் மாவட்ட துணை இயக்குனர் இலட்சுமி முரளி, மாவட்ட துணை இயக்குனர் தொழுநோய் வசந்தி, மருத்துவ அலுவலர் எச்.மோனிகா, திமுக நிர்வாகிகள் கே.கே.சொக்கலிங்கம், பரமேஸ்வரன், சாமுண்டீஸ்வரி சண்முகம், எஸ்.சௌந்தரராஜன், கே.ஏ.அபினாஷ், குப்புசாமி, கங்காதரன், மோகன்தாஸ், மேகநாதன், அப்புன்ராஜ், பாபு, சம்பத், கன்னியப்பன், ஜனார்த்தனன், பாலாஜி, கிரி, சிவபிரகாசம், முனுசாமி, வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: