விராலிமலை முருகன் கோயிலில் நவராத்திரி 10 நாள் விழா நாளை துவக்கம்

விராலிமலை: விராலிமலை முருகன் கோயிலில் நவராத்திரி 10நாள் விழா நாளை தொடங்குகிறது. விராலிமலை முருகன் மலைக்கோயில் சிறப்பு பெற்ற தலமாகும் 207 படிகள் கொண்ட இம்மலை கோயிலில் அருணகிரிநாதருக்கு அஷ்டமா சித்தி எனும் கூடு விட்டு கூடு பாயும் வித்தையை முருகன் கற்றளியதாக தல வரலாறுகள் கூறுகின்றன. ஆறுமுகங்களுடன் வள்ளி, தெய்வானை சமேதராக முருகன் காட்சியளிப்பது இம்மலைக் கோயிலின் தனி சிறப்பாகும்.

தேசிய பறவையான மயில்கள் இந்த மழைக்குள் தோகையை விரித்தாடி சுற்றி திரிவது இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும். பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த மலைக்கோயில் வைகாசி விசாகம், தைப்பூசம், சூரசம்காரம் உள்ளிட்ட விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் அந்த வகையில் நாளை நவராத்திரி விழா தொடங்குகிறது மாலை 7 மணி அளவில் மலை மேல் முருகன் சன்னதியில் தொடங்கும் விழாவில் விதவிதமான அலங்கரிக்கப்பட்ட கொலுக்கள் காட்சிப்படுத்தப்படும்.

10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் இறுதியில் அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்தி மலை மேல் இருந்து கீழ் இறங்கி வந்து திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.10 நாள் நடைபெறும் இவ்விழாவில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: