அறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரியின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் முதலாண்டு வகுப்புகள் தொடக்கம்

சென்னை: விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு தொடக்க விழா நடந்தது. விழாவில் பங்கேற்ற முதலாமாண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை துறையின் பேராசிரியை தமிழ்சுடர் வரவேற்றார். துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக பல்கலைக்கழகத்தின் இயக்குனர் அனுராதா கணேசன் பங்கேற்று தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக சென்னை ஜெம் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குனர் அசோகன் கலந்து கொண்டு மருத்துவ துறையில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். மேலும், துறையின் மூத்த மாணவர்கள் தங்களின் கல்லூரி அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். முடிவில், துறையின் பொறுப்பு இயக்குனர் வைஷ்ணவா தேவி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை துறையின் பேராசிரியர்கள் மற்றும் அலுலவக பணியாளரகள் செய்திருந்தனர்.

Related Stories: