சென்னை மாவட்ட திமுக பகுதி செயலாளர்கள் தேர்வு: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்டத்துக்கான திமுக பகுதி செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்களை பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுகவின் 15வது பொதுத்தேர்தல் நடந்து வருகிறது. இதில் சென்னை மாவட்ட பகுதி கழகத்துக்கு தேர்வான திமுக நிர்வாகிகள், பிரதிநிதிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி திமுக செயலாளராக ரா.லட்சுமணன், ஆர்.கே.நகர் மேற்கு பகுதி செயலாளர்-எஸ்.ஜெபதாஸ் பாண்டியன், ராயபுரம் கிழக்கு பகுதி செயலாளர்- ரா.செந்தில் குமார், ராயபுரம் மேற்கு பகுதி செயலாளர்-சுரேஷ் ஜெயக்குமார், பெரம்பூர் வடக்கு பகுதி செயலாளர்-அ.முருகன், பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளர்-க.ஜெயராமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர்-தி.மு.தனியரசு, திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர்-ம.அருள்தாசன், திருவொற்றியூர் மத்திய பகுதி செயலாளர்-ஏ.வி.ஆறுமுகம், மாதவரம் வடக்கு பகுதி செயலாளர்-புழல் எம்.நாராயணன், மாதவரம் தெற்கு பகுதி செயலாளர்-ஜி.துக்காராம்.

சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் கிழக்கு பகுதி செயலாளராக எஸ்.ராஜசேகர், துறைமுகம் மேற்கு பகுதி செயலாளர்-எஸ்.முரளி, எழும்பூர் வடக்கு பகுதி செயலாளர்-சொ.வேலு, எழும்பூர் தெற்கு பகுதி செயலாளர்-வி.சுதாகர், கொளத்தூர் கிழக்கு பகுதி செயலாளர்-ஐ.சி.எப்.வ.முரளிதரன், கொளத்தூர் மேற்கு பகுதி செயலாளர்-எ.நாகராஜன், திரு.வி.க.நகர் வடக்கு பகுதி செயலாளர்-செ.தமிழ்வேந்தன், திரு.வி.க.நகர் தெற்கு பகுதி செயலாளர்-எம்.சாமிகண்ணு, வில்லிவாக்கம் கிழக்கு செயலாளர்-வே.வாசு, வில்லிவாக்கம் மேற்கு பகுதி செயலாளர்-கூ.பி.ஜெயின், அம்பத்தூர் வடக்கு பகுதி செயலாளர்-ஜோசப் சாமுவேல், அம்பத்தூர் தெற்கு பகுதி செயலாளர்-டி.எஸ்.பி.ராஜ கோபால், அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர்-எம்.டி.ஆர்.நாகராஜ்.

சென்னை மேற்கு மாவட்டம் அண்ணாநகர் வடக்கு பகுதி செயலாளராக ச.பரமசிவம், அண்ணாநகர் தெற்கு பகுதி செயலாளர்-ந.ராமலிங்கம், சேப்பாக்கம் பகுதி செயலாளர்-எஸ்.மதன் மோகன், திருவல்லிக்கேணி பகுதி செயலாளர்-எ.ஆர்.பி.எம்.காமராஜ் என்கிற தனசேகரன், ஆயிரம்விளக்கு கிழக்கு பகுதி செயலாளர்-மா.பா.அன்பு துரை, ஆயிரம்விளக்கு மேற்கு பகுதி செயலாளர்-வே.வினோத். சென்னை தென்மேற்கு மாவட்டம் தியாகராய நகர் கிழக்கு பகுதி செயலாளராக ஜெ.கருணாநிதி, தியாகராயநகர் மேற்கு பகுதி செயலாளர்-கே.ஏழுமலை, மயிலாப்பூர் கிழக்கு பகுதி செயலாளர்-எஸ்.முரளி, மயிலாப்பூர் மேற்கு பகுதி செயலாளர்-கி.மதிவாணன்.

சென்னை தெற்கு மாவட்டம் சைதாப்பேட்டை கிழக்கு பகுதி செயலாளராக இரா.துரைராஜ், சைதாப்பேட்டை மேற்கு பகுதி செயலாளர்-எம்.கிருஷ்ணமூர்த்தி, கலைஞர் நகர் வடக்கு பகுதி செயலாளர்-மு.ரவி சங்கர் என்கிற ராஜா, கலைஞர் நகர் தெற்கு பகுதி செயலாளர்-கே.கண்ணன், வேளச்சேரி கிழக்கு பகுதி செயலாளர்-துரை.கபிலன், வேளச்சேரி மேற்கு பகுதி செயலாளர்-சு.சேகர், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளர்-வி.இ.மதியழகன், சோழிங்கநல்லூர் மத்திய பகுதி செயலாளர்- ச.அரவிந்த ரமேஷ், சோழிங்க நல்லூர் மேற்கு பகுதி செயலாளர்-எஸ்.வி.ரவிச்சந்திரன், மதுரவாயல் வடக்கு பகுதி செயலாளர்-நொளம்பூர் வே.ராஜன், மதுரவாயல் தெற்கு பகுதி செயலாளர்-காரம்பாக்கம் கணபதி. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளராக ப.குணாளன், ஆலந்தூர் தெற்கு பகுதி செயலாளராக என்.சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோல பகுதி அவைத்தலைவர், துணை செயலாளர்கள், பொருளாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: