பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி கோவை நகர உளவுத்துறை உதவி கமிஷனர் மாற்றம்

சென்னை: கோவை நகர உளவுத்துறை உதவி கமிஷனர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவையில் இரு நாட்களுக்கு முன்னர் பாஜக மாவட்ட நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோவை நகர உளவுத்துறையில் கூடுதல் துணை கமிஷனராக இருந்த முருகவேல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். சிறப்பு புலனாய்வுப் பிரிவு உதவி கமிஷனராக இருந்த பார்த்திபன், உளவுத்துறை உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார்.

Related Stories: