பசுமை தமிழகம் மிகப்பெரிய திட்டம்: சுப்ரியா சாகு பேட்டி

சென்னை: தமிழகசுற்றுச்சூழல் முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு கூறியதாவது: பசுமை தமிழகம் என்பது மிகப்பெரிய திட்டம் என்பதால் அரசாங்கத்தால் மட்டும் செயல்படுத்த முடியாது. இந்த நிகழ்வில் ஆட்டோ ஓட்டுநர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்கள், அரசு பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றால் பசுமை தமிழகம் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியும்.

ஆட்டோ ஓட்டுநர் மோகனா: மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலமாகவும், ஆட்டோ ஓட்டுநர் மூலமாகவும் முதலமைச்சரிடம் நிதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதே சாதனையாக உள்ளது. அரசாங்கமே முன்வந்து இத்திட்டத்தை செயல்படுத்தும்போது மக்களும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். மரங்களை வளர்த்தால் அடுத்த கட்டத்தை எட்டமுடியும்.

Related Stories: