ஜம்மு மாநகராட்சியின் மேயர், துணை மேயர் திடீர் பதவி விலகல்

ஜம்மு: ஜம்மு மாநகராட்சி மேயர் சந்தர் மோகன் குப்தா, துணை மேயர் பூர்ணிமா சர்மா ஆகியோர் நேற்று திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் பாஜ தலைவர் ரவீந்தர் ரெய்னா தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் ஜம்மு மாநகராட்சி மேயர் சந்தர்மோகன் குப்தாவும், துணை மேயர் பூர்ணிமா சர்மாவும் தங்களின் ராஜினாமா கடிதத்தை சமர்பித்தனர். இது தொடர்பாக ரவீந்தர் ரெய்னா கூறுகையில், ‘சந்தர் மோகன், பூர்ணிமா ஆகியோர் தாமாக முன்வந்து ராஜினாமா செய்துள்ளனர். அமைப்பை வலுப்படுத்துவதற்கு அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அடுத்த மேயர் யார் என்பது குறித்து உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்,’ என்றார். புதிய மேயரை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாஜ தேசிய பொதுச் செயலாளர் தருண் சாக் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Related Stories: