செங்கல்பட்டு ஜி.ஹெச்சில் லிப்டில் சிக்கிய பெண் மீட்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் லிப்டில் சிக்கிய பெண் ஊழியரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. செங்கல்பட்டு அருகே உதயம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜானகி (45). இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக உள்ளார். இவர் நேற்று தனது பணியை முடித்துவிட்டு அவசர சிகிச்சை பிரிவின் புதிய கட்டிடத்தின் 3வது தளத்தில் இருந்து லிப்டில் வந்துகொண்டிருந்தார்.

2வது தளத்துக்கு வந்தபோது லிப்டின் கதவு திறக்கவில்லை என்றதும் அதிர்ச்சி அடைந்தார். லிப்டில் கதவை தட்டியபடி கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு மருத்துவமனை ஊழியர்கள் விரைந்தனர். பின்னர் இரும்பு பைப் மூலம் லிப்டின் கதவை நெம்பி, ஊழியர் ஜானகியை பத்திரமாக மீட்டனர். சுமார் ஒரு மணி நேரம் லிப்டில் தவித்ததால் உடல் முழுவதும் வியர்த்து பதற்றத்துடன் காணப்பட்டார். பின்னர் அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் லிப்டில் ஊழியர் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: