திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதை ஒட்டி கூடுதலாக 10,000 பேர் தங்க விடுதி கட்ட ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதை ஒட்டி கூடுதலாக 10,000 பேர் தங்க விடுதி கட்ட ரூ.95 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் கொட்டத்தை கட்டுப்படுத்த சோதனை முறையில் பிரமோற்சவம் , புரட்டாசி முடிந்து பல மாற்றங்களை புகுந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பலமணிநேரம் பக்தர்கள் ஓரே இடத்தில் காத்திருப்பதை தவிர்க்க நேர ஒதுக்கீடு செய்யும் சர்வதரிசன டிக்கெட் வழங்கும் திட்டம் செய்யப்படும். திருப்பதியில் தினமும் 20,000 டிக்கெட் தரப்பட்டு ஒதுக்கீடு செய்த நேரத்தில் திருமலை சென்று 2 மணி நேரத்தில் தரிசனம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: