கோவையில் அசம்பாவிதங்களை தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது: மாவட்ட ஆட்சியர் பேட்டி

கோவை: கோவையில் அசம்பாவிதங்களை தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் எங்கேயும் குண்டு வெடிப்புகள் நடைபெறவில்லை என்றும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். கோவை மாநகரம் முழுவதும் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். 28 சோதனைசாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். தேவையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுசெய்துள்ளதால் கோவை மாவட்ட மக்கள் பதற்றப்பட வேண்டாம் என்று ஆட்சியர் சமீரன் பேட்டியளித்துள்ளார்.  

Related Stories: