தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர்களை நிறுத்தி எதிர்ப்பு: ஹரியானாவில் விவசாயிகளின் போராட்டத்தால் போக்குவரத்து முடக்கம்..!

சண்டிகர்: ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் விவசாயிகள் மேற்கொண்டுள்ள போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. கொள்முதலை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் வெள்ளிக்கிழமைக்குள் கொள்முதல் செய்யாவிட்டால் நெடுஞ்சாலையை முடக்குவோம் என்றும் பாரதிய கிசான் யூனியன் அறிவித்திருந்தது. அதன்படி குருஷேத்ராவில் கூடி விவாதித்த விவசாயிகள் போராட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் டிராக்டர்களுடன் டெல்லி - அமிர்தசரஸ் தேசிய நெடுஞ்சாலையை அவர்கள் முற்றுகையிட்டனர். போலீசார் தடுப்பு அரண்களை அமைத்து விவசாயிகளை தடுக்க முயன்றனர். ஆனாலும் தடுப்புகளை தகர்த்து விவசாயிகள் முன்னேறினர்.

நெடுஞ்சாலையில் டிராக்டர்களை குறுக்கும் நெடுக்கமாக விவசாயிகள் நிறுத்தி உள்ளனர். இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளது. வாகனங்கள் மாற்று வழியில் திருப்பு விடப்பட்டுள்ளன. விவசாயிகளுடன் 3 முறை அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும், உரிய முடிவு எதுவும் எட்டப்படவில்லை. பதற்றம் நிலவுவதால் பெரும் அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஹரியானா மாநிலத்தில் விவசாயிகளுடன் இருந்து வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது. ஆனால் அறுவடை முடிந்ததால் விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் குவித்துள்ளனர். மழை காரணமாக நெல் மணிகள் நினைத்ததால் விற்க முடியாத நிலை ஏற்படும் என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Related Stories: