×

இயற்கையை நம்மால் உருவாக்க முடியாது, ஆனால் இயற்கையை நம்மால் காக்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!

சென்னை: சென்னை வண்டலூர் பூங்காவில், பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் நடப்பாண்டு, முதல் கட்டமாக  37 மாவட்டங்களில்  உள்ள 360  நாற்றங்கால்கள் மூலம் வளர்க்கப்பட்டுள்ள  2.80 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; அடுத்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 32 கோடி மரக்கன்றுகள் நாடா திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாண்டு முதற்கட்டமாக 2.50 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இயற்கையை நம்மால் உருவாக்க முடியாது, ஆனால் இயற்கையை நம்மால் காக்க முடியும்.

இயற்கையை காக்க அனைவரும் முன்வர வேண்டும். இயற்கையை காப்பாற்ற பசுமை தமிழகம் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இயற்கையைப் பற்றி நமது தமிழ் புலவர்கள் அதிகம் எழுதியுள்ளனர். அனைத்து கோயில்களிலும் சிறப்பு மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இயற்கையை காப்பது என்பது நமது பிறப்பிலேயே உள்ளது. அரசும் ஆட்சியும் மட்டுமே இயற்கையை காக்க முடியாது; மக்களும் இணைந்து செயல்பட வேண்டும். இயற்கையை அரசும், மக்களும் காக்க வேண்டும். உலகம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல புல், பூண்டுகளுக்கும் சொந்தமானது. நீர்நிலைகளை நாம் பாதுகாக்க வேண்டும், காற்றை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும்.

பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காகவே நாம் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை கொண்டுவந்துள்ளோம். மரங்களை வைப்பது, வளங்களை பாதுகாப்பதில் பசுமை தமிழகம் இயக்கம் செயல்பட வேண்டும். காலநிலை மாற்றம் உலகிற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இயற்கையை காத்தல் என்பது மக்களை காப்பது போல் உள்ளது என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். வளர்ச்சியை நோக்கி செல்லும் போது இயற்கையையும் சேர்த்து காப்பாற்றி வருகிறோம். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க நாட்டு மரங்களை நடுவது அவசியம். பசுமை தமிழகம் இயக்கத்தை வெற்றி பெற செய்வது மக்கள் கையில் தான் உள்ளது.

Tags : CM. K. Stalin , We cannot create nature, but we can save nature: Chief Minister M.K.Stal's speech..!
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்;...