அவளூர் ஏரியில் இருந்து மீன்கள் வெளியேறாமல் தடுக்க மக்கிலியன் கால்வாயில் வேலி

காவேரிப்பாக்கம்:  காவேரிப்பாக்கம் அருகே ஏரியில் உள்ள மீன்கள் வெளியேறாமல் இருக்க மக்கிலியன் கால்வாயில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக பெய்த  மழையின் காரணமாக ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாலாற்றில் இருபக்கமும் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியது. எனவே, பாலாற்றில் இருந்து வரும் தண்ணீரை ஆங்காங்கே உள்ள ஏரிகளுக்கு கால்வாய் மூலம்  பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தின் மிக பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரியும் நிரம்ப தொடங்கி உள்ளது. இதேபோல், மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகளும் நிரம்பி வழிய தொடங்கி உள்ளது.

இந்நிலையில், காவேரிப்பாக்கம் அடுத்த அவளூர் ஏரிக்கு கடந்த வாரங்களாக மக்கிலியன் கால்வாயில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்பட்டு வருகிறது. இதனால் ஏரியில் உள்ள மீன்கள்  கால்வாய் மூலம் வெளியேறுவதாக கூறப்படுகிறது. எனவே, களத்தூர் கிராமத்திற்கு  செல்லும் தரைப்பாலம் அருகே இரும்பு வலை, முள் போன்றவைகளை வைத்து தடுப்பு வேலி அமைத்துள்ளனர். மேலும், பாதுகாப்பிற்காக ஒருவர் நியமிக்கப்பட்டு, அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏரிக்கு வரும் தண்ணீர் குறைவாகவே செல்கிறது.

Related Stories: