மதுரையில் 8 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு

மதுரை: மதுரையில் வசிக்கும் காளிமுத்து, பிரியதர்ஷினி தம்பதியின் 8 வயது மகள் மர்மமான முறையில் உயிரிழந்தார். வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காளிமுத்துவின் வீட்டுக்குச் சென்று போலீஸ் ஆய்வு செய்த போது 8 வயது சிறுமி தர்ஷினி சடலமாக மீட்கப்பட்டார். சிறுமி உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸ் தலைமறைவாக உள்ள தந்தை காளிதாசை தேடி வருகின்றனர்.

Related Stories: